25 மாவட்டங்களுக்கும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்தார் இராணுவத் தளபதி - News View

About Us

About Us

Breaking

Friday, January 1, 2021

25 மாவட்டங்களுக்கும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்தார் இராணுவத் தளபதி

கொவிட்-19 பரவல் கட்டுப்பாடு தொடர்பான வேலைத்திட்டங்களை மேலும் வலுவூட்டும் நோக்கில், நாட்டின் நிர்வாக மாவட்டங்கள் 25 இற்கும் தலா ஒவ்வொரு மாவட்ட இணைப்பதிகாரிகளாக, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவசர தேவையை கருத்திற்கொண்டு, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான, ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள குறித்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள், நேற்றையதினம் (31) இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

கொவிட்-19 பரவல் காரணமாக, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறித்த அதிகாரிகள் ஈடுபடுவர்.

அத்துடன் கொவிட்-19 நிலை மற்றும் அதனுடன் நேரடியாக தொடர்புபட்ட நோய்களின் கட்டுப்பாடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், அதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்குதல் மற்றும் ஏனைய அவசர நிலைமைகளின்போதான தேவைகளை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு, ஜனாதிபதி செயலகம், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி, சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுடனான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற பொறுப்புகள், ஜனாதிபதி செயலகத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வட மாகாணம்
1. மேஜர் ஜெனரல் W G H A S பண்டார - யாழ்ப்பாணம்
2. மேஜர் ஜெனரல் கே என் எஸ் கொட்டுவேகொட – கிளிநொச்சி
3. மேஜர் ஜெனரல் ஆர் எம் பி ஜே ரத்நாயக்க - முல்லைத்தீவு
4. மேஜர் ஜெனரல் W L P W பெரேரா - வவுனியா
5. மேஜர் ஜெனரல் A A I J பண்டார - மன்னார்

வட மத்திய மாகாணம்
6. மேஜர் ஜெனரல் ஜே சி கமகே – பொலன்னறுவை
7. மேஜர் ஜெனரல் எச் எல் வி எம் லியனகே - அனுராதபுரம்

வட மேல் மாகாணம்
8. மேஜர் ஜெனரல் A P I பெர்னாண்டோ - புத்தளம்
9. பிரிகேடியர் பி எம் ஆர் எச் எஸ் கே ஹெரத் – குருனாகலை

மேல் மாகாணம்
10. மேஜர் ஜெனரல் கே டபிள்யூ ஆர் டி அப்ரூ - கொழும்பு
11. மேஜர் ஜெனரல் என் ஆர் லமாஹேவகே - கம்பஹா
12. பிரிகேடியர் கே என் டி கருணபால - களுத்துறை

மத்திய மாகாணம்
13. மேஜர் ஜெனரல் எச் பி என் கேஎ ஜேயபதிரன – நுவரரெலியா
14. மேஜர் ஜெனரல் எஸ் எம் எஸ் பி பி சமரகோன் - கண்டி
15. மேஜர் ஜெனரல் S U M N மாணகே – மாத்தளை

சப்ரகமுவ மாகாணம்
16. பிரிகேடியர் ஜே எம் ஆர் என் கே ஜெயமண்ண – இரத்னபுரி
17. பிரிகேடியர் எல் எ ஜே எல் பி உடுவிட்ட – கேகாலை

கிழக்கு மாகாணம்
18. மேஜர் ஜெனரல் சி டி வீரசூரிய - திருகோணமலை
19. மேஜர் ஜெனரல் டி டி வீரகூன் – அம்பாறை
20. மேஜர் ஜெனரல் சி டி ரணசிங்க - மட்டக்களப்பு

ஊவா மாகாணம்
21. பிரிகேடியர் இ எ பி எதிரிவீரா – பதுள்ளை
22. கர்ணல் டி யு என் சேரசிங்க – மொனராகலை

தென் மாகாணம்
23. மேஜர் ஜெனரல் டி எம் எச் டி பண்டார – ஹம்பாந்தோட்டை
24. மேஜர் ஜெனரல் W A S S வனசிங்க - காலி
25. கர்னல் கே எ யு கொடிதுவக்கு – மாத்தறை

No comments:

Post a Comment