தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25% 25 வீத இட ஒதுக்கீடு குறித்து பிரேரணை - இம்தியாஸ் எம்.பி சமர்ப்பிப்பு, ஐ.நா. தூதுவர் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 3, 2021

தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25% 25 வீத இட ஒதுக்கீடு குறித்து பிரேரணை - இம்தியாஸ் எம்.பி சமர்ப்பிப்பு, ஐ.நா. தூதுவர் பாராட்டு

இலங்கையில் நடைபெறவிருக்கும் எந்தவொரு தேர்தலிலும் இளம் வேட்பாளர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் 15-30 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

இருப்பினும், ஒரு நாடு என்ற வகையில், அவர்களது எதிர்காலம் தொடர்பில் தீர்மானிக்கும் செயல்பாட்டில் போதுமான இளைஞர்கள் எங்களிடம் இல்லை, எனவே இந்த திருத்தம் அவசியமானது என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் இந்த டுவிட்டர் பதிவை ஐக்கிய நாடுகளின் இளைஞர்களுக்கான தூதுவர் ஜயத்மா விக்கிரமநாயக்க பாராட்டியுள்ளதுடன் “புத்தாண்டு தினத்தில் இவ்வாறான பதிவை காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னின்று செயற்படும் பாக்கீர் மாக்காருக்கு நன்றி” என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ், இளைஞர்களுக்கான தூதுவராக ஜயத்மா விக்கிரமநாயக்கவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ò70 களின் ஐ.நா வில் மாணவர்களின் இயக்கங்கள் மூலம் அரசியலில் நுழைந்த ஒரு அரசியல்வாதி என்ற வகையில், நமது அடுத்த தலைமுறை இளைஞர்கள் அரசியல் கட்டமைப்புகளில் அர்த்தமுள்ள பங்களிப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று அவர் மேலும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் இளைஞர் இயக்கத்துடன் உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளார், எதிர்வரும் தேர்தல்களில் இளம் வேட்பாளர்களுக்கு 25% ஒதுக்கீடு செய்வார். இந்த உறுதிமொழி எதிர்வரும் மாகாண சபை தேர்தலுடன் நடைமுறைக்கு வருமென்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment