விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபுணர்கள் முறைப்படி கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டங்கள் கொவிட்19 ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்தார். அவ்வாறான நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொவிட்19 தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பாலித்த கருணாபேம கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்கு, மீள் பரிசீலனை செய்து கொண்டு நடவடிக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்19 நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலைகளில் போதுமான அளவு வசதி உள்ளதாக அவர் கூறினார்.
பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட பிரதேச நிறுவனங்களை இணைத்துக் கொண்டு கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக டொக்டர் பாலித்த கருணாபேம கூறினார்.
பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் புதிதாக இனங்காணப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ், ஏனைய வைரஸை விட 50 வீத வேகத்தில் பரவக்கூடியதென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் நீலகா மலவிகே இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment