கோவிட்-19 ஜனாஸா விவகார சட்ட விளக்கத்தை தெளிவுபடுத்தினார் சட்டத்தரணி மர்சூம் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

கோவிட்-19 ஜனாஸா விவகார சட்ட விளக்கத்தை தெளிவுபடுத்தினார் சட்டத்தரணி மர்சூம் மௌலானா

நூருல் ஹுதா உமர் 

Chapter 553 of Quarantine and Prevention of Diseases Ordinance என்கிற நியதிச் சட்டமும் Sections 2 and 3 of the Quarantine and Prevention of Diseases Ordinance (Chapter 222) குறிப்பிடுகின்ற இறந்த உடல்களை புதைத்தல் மற்றும் எரித்தல் பற்றிய விடயங்களை குறிப்பிடும் ஒழுங்கு விதிகளும் சமகாலத்தில் ஜனாஸா விவகாரம் தொடர்பில் மிக முக்கியமானவை என அறிஞர் சித்தி லெப்பை ஆய்வு மன்ற தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா விளக்கியுள்ளார்.

தனது விளக்கத்தில் மேலும், மேற்குறித்த சட்டங்களில் Chapter 222 குறிப்பிடும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சர் Covid 19 and Quarantine தொடர்பிலான முதலாவது Extra Ordinary Gazette Notification 2167/ 18 எனும் இலக்க வர்த்தமானியை 20.03.2020 அன்று வெளியிடுகிறார். மேலும் அதே Chapter 222 இன் பிரகாரம் Regulations relating to Anchylostomiasis 1925, Quarantine Regulations 1960 போன்ற Regulations தொடர்பிலும் அவற்றின் மூலம் அமைச்சருக்கு மேலதிக ஒழுங்கு விதிகளை உருவாக்கும் அதிகாரத்தின் மூலம் மீண்டும் 2170 / 8 இலக்கத்திலான ஒரு விஷேட வர்த்தமானியினை 11.04.2020 அன்று அதே அமைச்சர் வெளியிடுகிறார். 

இந்த விஷேட வர்த்தமானி கொரானோ வைரஸ் தொற்றால் இறந்த உடலங்கள் அனைத்தும் கட்டாய எரித்தல் முறைமைக்கு உள்ளாக வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதேவேளை Sections 3 (i) of Quarantine and Prevention Diseases Ordinance mode of burial or cremation தொடர்பில் உள்ள தெரிவு பற்றிய ஒழுங்கு விதிகளை பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.

இத் தெரிவு நியதிச் சட்டம் நமக்கு வழங்கிய தெரிவு. எனவே கட்டாய எரித்தல் என்று ஒரு ஒழுங்குவிதி உருவாக வேண்டும் என்றால் அதற்கான புறநடை பற்றி நியதிச் சட்டம் தெளிவாக அறிவுறுத்தல் வேண்டும். அதனால்தான் பாராளுமன்றத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்கள் கடந்த புதன்கிழமை ஆற்றிய உரையில் மரித்த மனித உடல்களின் எரிப்பை நிர்ப்பந்திக்கும் வர்த்தமானி அறிக்கை, பாராளுமன்றத்தினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நியதிச்சட்டம் வழங்கிய புதைக்கும் உரிமையினை மறுக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

பொருள்கோடல் சட்டத்தின் பிரகாரம் குறித்த வர்த்தமானி பாராளுமன்றத்தினது நோக்கத்திற்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்டி அந்த வர்த்தமானியினை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என்றார். குறித்த வர்த்தமானி மேலதிகமாக உருவாக்கிய Regulations 61 A கட்டாய எரிப்பை வலியுறுத்தி ஏற்கனவே இருந்த Regulations 61 மற்றும் 62 ஆகியன விதந்துரைத்த புதைப்பதற்கான விடயங்களை வறிதாக்கல் செய்கிறது.

எனவே நிபுணர் குழு அறிக்கை நமக்கு சாதகமாக வந்த பின்னரும் குறித்த வர்த்தமானி ரத்துச் செய்யப்படாவிட்டால் எரிப்பது தொடர்கிறது என்றால் தனிநபர் பிரேரணை மூலம் நமது சட்டவாக்கத்திற்கான ஜனநாயக உரிமையினைப் பயன்படுத்துவது நமது கண் முன்னே தெரியும் தெளிவான தெரிவாகும். இதனை பயன்படுத்தி பாராளுமன்றத்தனூடாக தீர்வு காண முனையும் தேசிய காங்கிரஸ் தலைவரின் முயற்சி பாராட்டத்தக்கது என்றார்.

No comments:

Post a Comment