வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த 16 பேருக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.
அதனடிப்படையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 13 பேருக்கும் ஆடைத் தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 170 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 500 பேரின் பி.சி.ஆர். முடிவுகள் கிடைக்கப் பெற்ற பின்னரே நகரின் முடக்கம் தளரத்தப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment