கிளங்கன் வைத்தியசாலையின் மகளிர் சிகிச்சைப் பிரிவுக்கு பூட்டு - 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

கிளங்கன் வைத்தியசாலையின் மகளிர் சிகிச்சைப் பிரிவுக்கு பூட்டு - 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

நுவரெலியா - டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையின் மகளிர் சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் யுவதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமையால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிளங்கன் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், மகளிர் சிகிச்சைப் பிரிவை மற்றுமொரு விடுதியில் துரிதமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையின் மகளிர் சிகிச்சைப் பிரிவிலிருந்த வைத்தியர், தாதியர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் 15 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிளங்கன் வைத்தியசாலையில் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட யுவதி, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad