மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா! - News View

Breaking

Post Top Ad

Tuesday, January 12, 2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 21 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா!

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், கிளினிக் நோயாளர்கள் தபாலகங்களில் ஊடாக மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்தார்.

போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்று ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டானைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனைதெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் அதிகரித்து காணப்படுகின்றது.

இதுவரை 425 தொற்றாளர்கள் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டதில் 80 பேர் கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன் 3 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை 10 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றும் 21 ஊழியர்களுக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும்போது வைத்தியசாலை நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்படலாம்.

இதனை தவிர்ப்பதற்காகவும் நோயாளியில் இருந்து ஊழியர்களுக்கும், ஊழியர்களில் இருந்து நோயாளிகளுக்கும் தொற்று பரவலை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில் ஊழியர்கள் தகுந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவைகளை ஆற்றி வருகின்றனர்.

அதேவேளை தொற்றா நோயான சக்கரைவியாதி, இதய நோய், சிறுநீரக நோய், புற்று நோய், மற்றும் வயோதிபர்கள் போன்றோருக்கு இது அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்துவதால் இவ்வாறனவர்கள் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவதை தவிர்த்து கிராம சேவகர் ஊடாக தபால் மூலமாக மருந்துக்களை பெற்றுக் கொள்ள முடியும்.

இதற்கான தொலைபேசி எண்களான 065 3133330, 065 3133331 என்ற தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு கிளினிக்குரிய மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் வைத்தியசாலைக்கு அவசியம் ஏற்படும் போது நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு தங்களுக்கு அருகாமையிலுள்ள வைத்திசாலைக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதேவேளை நோயாளர்களை பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் தற்போது உள்ள நிலமை காரணமாக நோயாளர்களை பார்வையிடும் நேரத்தை குறைத்து 15 நிமிடம் வரை பார்வையிட்டு செல்வது சிறப்பானதாகும்.

நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருந்தும் நோயாளிக்கோ, பொதுமக்களுகோ தேவையான அவசியமான தேவைகளை நாங்கள் வழங்கி வருகின்றோம்.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களான கிழக்கு மாகாணத்தில் 40 ஆயிரம் பேருக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளததுடன் இதனை பரிசோதனை செய்யும் இடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மட்டும்தான். எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பேணி வைத்தியசாலைக்கு ஓத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad