அநீதியான வகையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள வர்த்தகர்கள் 14,906 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க 15,929 சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அத்துடன் தொடர்புடைய 14,906 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் தெவித்துள்ளது.
அத்துடன் 6 கோடிக்கு அதிகமான தண்டப்பணத்தை அவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி சுற்றிவளைப்புக்களின் அரிசி தொடர்பாக 3,880 சுற்றிவளைப்புகளும், சீனி தொடர்பாக 651 சுற்றி வளைப்புகளும், பருப்பு தொடர்பாக 471 சுற்றிவளைப்புகளும் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் பிஸ்கட் உற்பத்தி, மருந்து மற்றும் அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, சிறுவர்களுக்கான உற்பத்திப் பொருட்கள், ஆடைத் தொழில் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் தொடர்பிலும் சுற்றிவளைப்புக்கள் முனனெடுத்து வருவதாவும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment