நித்திரையிலிருந்த 12 வயது சிறுவனை பாம்பு தீண்டியதில் பலி - News View

Breaking

Post Top Ad

Monday, January 11, 2021

நித்திரையிலிருந்த 12 வயது சிறுவனை பாம்பு தீண்டியதில் பலி

நித்திரையில் இருந்த சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒஸ்போன் தோட்டதைச் சேர்ந்த 12 வயதுடைய ரொபட் தோபிய எஸ்கர் என்ற சிறுவனே இன்று (11) அதிகாலை இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அதிகாலை ஒரு மணியளவில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த சிறுவனின் கழுத்தில் பாம்பொன்று இருப்பதை கண்ட பெற்றோர் பாம்பை அடித்து வீசி விட்டு மீண்டும் நித்திரை கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை நான்கு மணியளவில் குறித்த சிறுவன் மயக்கம் வருவது போலிருப்பதாக பெற்றோரிடம் கூறியதையடுத்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசலையில் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிறுவனை தீண்டிய பாம்பு இறந்த நிலையில் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்குற்படுத்தப்பட்டபோது பாம்பு தீண்டி விசமானதாலே உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad