கட்டார் - சவூதிக்கு இடையே மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 11, 2021

கட்டார் - சவூதிக்கு இடையே மீண்டும் விமான சேவைகள் ஆரம்பம்

கட்டார் மற்றும் சவூதி அரேபியா சுமார் மூன்று ஆண்டுக்குப் பின்னர் நேரடி விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் பூசல் ஏற்பட்டது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது இரு தரப்பும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை ரியாத்திலிருந்தும், 14 ஆம் திகதி ஜித்தாவிலிருந்தும், 16 ஆம் திகதி தமாமிலிருந்தும் விமானச் சேவைகள் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கப்படும் என்று கட்டார் ஏர்வேஸ் ட்விட்டரில் தெரிவித்தது.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஒத்துழைப்பதாகக் கூறி சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உறவை முறித்துக் கொண்டன.

அந்தக் குற்றச்சாட்டை கட்டார் மறுத்து வந்தது. தற்போது, சவூதி அரேபியாவும் அதன் கூட்டணி நாடுகளும் கட்டாருடனான எல்லாத் தொடர்புகளையும் பழைய நிலைக்குக் கொண்டுவர இணங்கியுள்ளன.

No comments:

Post a Comment