முதலமைச்சராக்க முனையும் பலர், விக்கி MP பதவியை துறப்பாரா? - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

முதலமைச்சராக்க முனையும் பலர், விக்கி MP பதவியை துறப்பாரா?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தனது பாராளுமன்ற உறுப்புரிமையை துறந்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க வேண்டுமென உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலுள்ள ஆதவாளர்கள் சிலரால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரும் இந்த விடயத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகிறார். கூட்டணியின் ஏனைய கட்சித் தலைவர்களுடன் இதை அவர் பேசியுமுள்ளார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலுள்ள ஆதவாளர்கள் சிலர் இந்த யோசனையை முன்வத்துள்ளனர். 

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அவர் இல்லாமல், அவரது கூட்டணி கரை சேர்வது சிரமம் என அவர்கள் கருதுகிறார்கள். 

கடந்த மாகாண சபை ஆட்சியில் “நேர்மையானவர்“ என்ற அபிப்பிராயத்தை மக்களிடமிருந்து அவர் பெற்றிருப்பதாகவும், அவர் களமிறங்கினால் சாதகமான பலனை பெறலாமென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நாளுக்குநாள் முரண்பாடுகள் முற்றி, அணிகள் தோற்றம் பெற்று வரும் நிலையில், மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு மேலும் சரிவை சந்திக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment