இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லையென்பது பி.சி.ஆர் பரிசோதனை மூலம் நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பங்கேற்றிருந்த நிகழ்வில் அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரும் பங்கேற்றிருந்தார்.
அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஜீவன் தொண்டமானும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் அவரிடம் பி.சிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அமைச்சு மற்றும் தொழிற்சங்க பணிகளை ஜீவன் தொண்டமான் விரைவில் ஆரம்பிக்கவுள்ளார் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment