அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதே இலக்கு, அரசின் எதிர்கால திட்டம் குறித்து அமைச்சர் யாப்பா விளக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 30, 2020

அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதே இலக்கு, அரசின் எதிர்கால திட்டம் குறித்து அமைச்சர் யாப்பா விளக்கம்

அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக கட்டியெழுப்பும் நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொள்கின்றது. அவற்றை விற்பனை செய்வதாக கூறப்படும் விமர்சனங்களில் எந்தவித உண்மையும் கிடையாதென இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடாக எமது நாடு மாறிவிடக் கூடாதென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் கடமையாகுமெனவும் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளுடன் தொடர்புகளை சிறப்பாக பேண வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்ற போது அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர் தனியார் துறை மற்றும் அரச துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவசியமாகின்றன. அதற்கு டெலிகொம் நிறுவனம் சிறந்த உதாரணமாகும். 

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையில் பெருமளவு நிதியையும் உணவு பொருட்களையும் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ளது. தொடர்ந்தும் அனைவரது ஒத்துழைப்பும் அரசாங்கத்துக்கு அவசியமாகும்.

அரச வளங்களை விற்பனை செய்வதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் எந்த உண்மையும் கிடையாதென்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். அரச நிறுவனங்களை நட்டமடையாமல் இலாபமீட்ட செய்வதற்காக தனியார் துறையின் ஒத்துழைப்புகள் பெறப்படுகின்றன.

அதனை திரிபுபடுத்தியே பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment