கல்முனை செயிலான் வீதி முதல் வாடி வீட்டு வீதி வரையான பகுதிகளுக்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, December 28, 2020

கல்முனை செயிலான் வீதி முதல் வாடி வீட்டு வீதி வரையான பகுதிகளுக்கு பூட்டு

கல்முனை செய்லான் வீதியிலிருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரை உள்ள அனைத்து பிரதேசங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மறு அறிவித்தல் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று (28) இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்கு வரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று கல்முனை பொதுச் சந்தை, கல்முனை பஸார், கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தகர்களுக்கு மேற்கொண்ட அண்டிஜன் பரிசோதனையில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும், தொற்றாளர்களை இணங்கான்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment