முடக்கப்பட்டது வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 28, 2020

முடக்கப்பட்டது வட்டவளை, மவுன்ஜின் தோட்டம்

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை, மவுன்ஜின் தோட்டம் இன்று (28.12.2020) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மவுன்ஜின் தோட்டத்தில் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இந்நிலையிலேயே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் மவுன்ஜீன் தோட்டம் முடக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இத்தோட்டத்தில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment