முஸ்லிம்களை தகனம் செய்வதற்கு எதிராக மருதமுனையில் ‘கவன் சீலை போராட்டம்’ - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

முஸ்லிம்களை தகனம் செய்வதற்கு எதிராக மருதமுனையில் ‘கவன் சீலை போராட்டம்’

கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (14) மருதமுனையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

அதில் ஒரு அங்கமாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஐ.ரைசூல் ஹாதி தலைமையில், பொது அமைப்பு பிரதிநிதிகள் இணைந்து மருதமுனை ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு முன்னாள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் ‘கவன் சீலை போராட்டம்’ எனும் தொணியில் இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாகிர் மௌலானா, பொரளை பொது மயானத்தில் இவ்வாறான போராட்டமொன்றை ஆரம்பித்து வைத்ததை அடுத்து தற்போது தொடர்ச்சியாக இவ்வாறான போராட்டங்கள் நாடளாவிய ரீதியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment