தபால் மூலம் அனுப்பப்படும் பொதிகளை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிப்பதற்கான புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாளை 15ஆம் திகதி முதல் அந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதற்கு முன்னர் தபால் மூலமான பொதிகளில் வரும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் உரிய நபர்கள் தபால் அலுவலகத்திற்கு வருகை தருவதே நடைமுறையிலிருந்தது.
அதற்கு பதிலாக வீடுகளுக்கு எடுத்துச் சென்று பொதிகளை விநியோகிக்கும் நடைமுறை நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
அதன் முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபா வரையிலான பெறுமதியுள்ள பொதிகளை வீடுகளிற்கு கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு அடுத்த கட்டமாக எதிர்வரும் காலங்களில் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட பொருட்களையும் வீடுகளுக்கு கொண்டுசென்று விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment