பிரதமர் முன்னிலையில் பதவியேற்றார் தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

பிரதமர் முன்னிலையில் பதவியேற்றார் தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவர்

தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவராக திரு. காரியப்பெருமகே பியசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (2020.12.29) பதவியேற்றார்.

விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு.மிலான் ஜயதிலக கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் திரு. காரியப்பெருமகே பியசேன அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment