உக்ரைனிலிருந்து மேலும் 213 உல்லாசப் பிரயாணிகள் நேற்று இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் நேற்று மதியம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாகவும் அவர்களில் 204 உல்லாசப் பிரயாணிகளும், பணியாளர்களும் உள்ளடங்குவதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை நேற்று முன்தினம் உக்ரைனிலிருந்து 180 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன் அவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்தது.
தற்போது பெந்தொட்டை, கொக்கல பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு மேலும் ஒரு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்தது.
அதேவேளை, பெருமளவிலான உல்லாசப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் அதற்கமைய பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கையை கவனத்திற்கொண்டு தினமும் 3,000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment