அனலைதீவு பகுதியில் கடற்படையினர் என கூறி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனலைதீவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவு வேளை சென்ற மூவர், தம்மை கடற்படையினர் என கூறி, வீட்டினுள் கஞ்சா போதைப் பொருள் உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் , அதனால் வீட்டினை சோதனையிட வேண்டும் என கூறி வீட்டினுள் சென்றுள்ளனர்.
வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள், வீட்டினுள் இருந்த சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அது தொடர்பில் வீட்டாரால், கடற்படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவரை கைது செய்து ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவரை விடுவித்ததுடன், ஏனைய இருவரும் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மற்றுமொருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கொள்ளை நடந்த வீட்டின் குடும்ப தலைவர் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்.விசேட நிருபர்
No comments:
Post a Comment