முஸ்லிம்களது உடல்கள் தகனம் செய்வதற்கு திருகோணமலையிலும் எதிர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

முஸ்லிம்களது உடல்கள் தகனம் செய்வதற்கு திருகோணமலையிலும் எதிர்ப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் சமூகத்தவர்களது உடல்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை மாவட்ட சமூகத்தவர்களால் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஏனைய நாடுகளில் உடல்களை தகனம் செய்யாது புதைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக இறக்கும் அனைவரது உடல்களும் தகனம் செய்யப்படுகிறது.

இதனை வன்மையாக கண்டிக்கும் முகமாகவும் மத மற்றும் கலாசார விழுமியங்களுக்கு மதிப்பளித்து இறக்கும் முஸ்லிம்களது உடல்களை புதைப்பதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக உள்ள காந்தி சிலையினை சுற்றி அமையப் பெற்ற வேலியில் வெண்ணிறப் பட்டிகளை கட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிடம் விளக்கம் பெறப்பட்டது.

அத்துடன், கொரோனா காலத்தில் ஒன்றுகூடியதன் காரணமாக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment