பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாளைய ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டாம் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இது தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது நாளை பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல்களில் அல்லது அதனை அண்டிய பிரதேசங்களில் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாமென சகல பள்ளிவாசல்களின் பொறுப்புதாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment