நேபாள அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

நேபாள அரசு கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

நேபாள பாராளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இணைத் தலைவரான புஷ்பகமால் தாஹால் நேபாள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

நேபாள இடைக்கால அரசின் பிரதமரான கே.பி. ஷர்மா ஒலியை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என பிரதமர் ஒலி ஜனாதிபதியை கேட்டுக் கொண்டதையடுத்து ஏழு அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்ததையடுத்து அந்நாட்டில் அரசியல் நெருக்கடி ஆரம்பமாகியுள்ளது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து ஆளும் கட்சியின் சில பிரிவிற்கும் எதிர்க்கட்சிகளும் வீதி ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பாராளுமன்றக் கலைப்பு அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். 

நேபாள கம்யூனிசக் கட்சியின் சில பிரிவினரின் அரசியல் அழுத்தத்துக்கு பிரதமர் முகம் கொடுத்துவரும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தனது ஆதரவாளர்களை காத்மண்டுவில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து அவசர கூட்டமொன்றை இடைக்கால பிரதமர் நடத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad