பண்டிகை காலத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும், இல்லையேல் ஆபத்தை தவிர்க்க முடியாது விடும் என்கிறார் வைத்தியர் சிரானி சந்திரசிறி - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

பண்டிகை காலத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும், இல்லையேல் ஆபத்தை தவிர்க்க முடியாது விடும் என்கிறார் வைத்தியர் சிரானி சந்திரசிறி

பண்டிகை காலத்தில் பெருமளவில் மக்கள் களியாட்ட நிகழ்வுகளில் அல்லது விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொள்வதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என சுகாதார பிரிவுகள் எச்சரித்துள்ளன.

சமூக விலக்கல், கொரோனா வைரஸ் குறித்த விதிமுறைகளை புறக்கணித்து கிறிஸ்மஸ், புத்தாண்டு காலப்பகுதியில் விருந்துபசார நிகழ்வுகளையும் பெருமளவானவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளையும் நடத்துவதற்கு தீர்மானிப்பதால் நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரிப்பு ஆபத்தானதாக மாறலாம் என நுண்ணுயிரியல் ஆலோசகர் வைத்தியர் சிரானி சந்திரசிறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்கின்றது. அது முடிவிற்கு வருவதற்கான அறிகுறிகள் தற்போதைக்கு தென்படவில்லை. சுகாதார விதிமுறைகள் பின்பற்ற வேண்டியது மக்களின் கடமை என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் இலங்கையில் கொரோனா வைரசின் முதலாவது அலையை தோற்கடித்தது போல இரண்டாவது அலையையும் தோற்கடிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டால் கொரோனா வைரசினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்,புதிய வருடத்தில் நாடு மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad