போதைப் பொருள் பயன்படுத்தியவர்களுக்கு ஒரு வருடத்திற்கு கனரக வாகன சாரதி உரிமம் வழங்கப்படாது என்று அமைச்சர் திலும் அமுனுகம கூறியுள்ளார்.
ஜனவரி 1 முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருமென்றார்.
கனரக வாகன சாரதி விண்ணப்பதாரர்கள் போதைப் பொருள் பாவித்துள்ளார்களா என்பதை ஆராய சிறப்பு உயிரியல் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.
தனியார் பஸ் மற்றும் கனரக வாகன சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார்களையடுத்து இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment