பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது - நட்டத்தை கடந்த அரசாங்கம் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது : மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது - நட்டத்தை கடந்த அரசாங்கம் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது : மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

(இராஜதுரை ஹஷான்)

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள நட்டத்துக்கு கடந்த அரசாங்கம் மாத்திரம் பொறுப்பேற்க முடியாது. என மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் அனுருத்த சோமவடு தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது. சுபீட்சமான எதிர்கால கொள்கைத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அரச நிர்வாகத்தில் ஊழல் மோசடிகள் இடம் பெறுவதான வழிமுறைகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரச நிர்வாக முறைமையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்கினால் அதன் தாக்கம் நாட்டு மக்களை சேரும். மின்சாரத்துறை இதுவரை காலத்தில் மாத்திரம் 300 பில்லியன் நட்டத்தை எதிர் கொண்டுள்ளது.

மின்சாரத்துறையின் வீழ்ச்சிக்கு கடந்த அரசாங்கம் மாத்திரம் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க அரசாங்கம் குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த ஒரு வருடத்தில் மின்சாரத்துறை அபிவிருத்தி திட்டங்கள் திட்டமிட்ட வகையில் தாமதப்படுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஒரு வருடத்தில் மின்சாரத்துறை அபிவிருத்தி குறித்து புதிய திட்டங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நீக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

எனவே நத்தார் பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை கிடைத்தாலும் மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வதே சிறந்ததாகும்.

அபாயத்தை உணர்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். கட்டுநாயக்க வர்த்த நிலையம் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகள் என்பவற்றில் இவ்வாறு விடுமுறை வழங்கப்படக்கூடும். அவ்வாறு விடுமுறை கிடைக்கப் பெறுபவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே இருக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக ஒழுங்குபடுத்தப்படும் விமானங்கள் ஊடாக நாளாந்தம் இலங்கையர்கள் அழைத்து வரப்படுவார்கள். அவர்கள் நிச்சயம் அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும். மாறாக சரக்கு விமானங்கள் அவ்வாறு அறிவிக்க வேண்டிய தேவை கிடையாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad