வயது முதிர்ந்தோருக்கே கொரோனா ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே - News View

Breaking

Post Top Ad

Thursday, December 24, 2020

வயது முதிர்ந்தோருக்கே கொரோனா ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன : சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே

(நா.தனுஜா)

வயது முதிர்ந்தோருக்கே கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் உயர்வாகக் காணப்படுகின்றன. இந்த அச்சுறுத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்றும் அதற்காக விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்கவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

மேலும், நாட்டின் மிக முக்கியமான பிரிவினருக்கு சேவையாற்றுகின்ற கட்டமைப்புகளாக சமூக சேவைத் திணைக்களமும் முதியோர் செயலகமும் விளங்குகின்றது. 

கொரோனா வைரஸ் பரவலினால் தற்போது நாடு அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில், வயது முதிர்ந்தோரே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

அதுமாத்திரமன்றி விசேட சமூகப் பாதுகாப்பு செயற்திட்டமொன்றை உருவாக்குவதும் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad