தேசிய நல்லிணக்கம், நிலைபேறான அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்த உதவிகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர் அமைச்சர் டக்ளஸிடம் உறுதியளிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 1, 2020

தேசிய நல்லிணக்கம், நிலைபேறான அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்த உதவிகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர் அமைச்சர் டக்ளஸிடம் உறுதியளிப்பு

தேசிய நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தினை உயர்த்துவற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் பி ரெப்லிட்ஸ் உறுதியளித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று (01.12.2020) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையிலான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில், குறித்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டிய கடற்றொழில் சார் விடயங்கள் தொடர்பாக அறிந்து கொள்வதே இன்றைய சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்திருந்தது.

இதன்போது, இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தில் பல மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பருத்திதுறை - குருநகர் - பேசாலை போன்ற மீன்பிடித் துறைமுகங்களை அமைப்பதற்கு திட்டங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, நீர்வேளாண்மையை விருத்தி செய்வதிலும் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்ததுடன், துறைசார் அதிகாரிகளுடன் கலந்தரையாடி காலநிலை மாற்றம் தொடர்பான அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த கலந்துரையாடலின் போத, கடற்றொழில் செயற்பாடுகளில் காணப்படும் சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கைத் தரத்தினை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் தற்போதைய நிலைரங்கள் தொடர்பாகவும் அமெரிக்க தூதுவரினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்ள முடியும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தன்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையினை முழுமையாக பயன்படுத்துவதனை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்து கொள்வதை நோக்கி நகர முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலத்தில் சில தமிழ் தலைமைகளின் சுயநலன் சார்ந்த - தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருப்பதனை தன்னால் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமெரிக்கத் தூதுவர், தேசிய நல்லிணக்தின் மூலமே பிரச்சினைகளை அணுக முடியும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தினை பாராட்டடியதுடன், அமைச்சரவையில அங்கம் வகிக்கின்ற தமிழர் என்ற அடிப்படையிலும் நாடாளுன்ற பேரவையின் உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அமைச்சருக்கு இருப்பதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை அமெரிக்கா வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும். கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை உயர்த்துவதற்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முதலீடுகள் தொரடர்பாக கடற்றொழில் அமைச்சுடன் இணைந்த செயற்படுவதற்கும் அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன், தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி அடம் ஸ்மித் மற்றும் யூ.எஸ். எயிட் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பணிப்பாளர் கிறிஸ் பொலே ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்தனாயக்க, அமைச்சரின் ஆலோசகர் எஸ். தவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment