இலங்கையில் நான்கு ஆண்டுகளில் அகற்றப்பட்டுள்ள பாரியளவிலான வெடி பொருட்கள்..! - News View

About Us

About Us

Breaking

Saturday, December 12, 2020

இலங்கையில் நான்கு ஆண்டுகளில் அகற்றப்பட்டுள்ள பாரியளவிலான வெடி பொருட்கள்..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் மற்றும் தச்சடம்பன், கிளிநொச்சி மாவட்டத்தின் முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1,536,965 சதுர மீற்றர் பரப்பளவில் இருந்து 24,893 அபாயகரமான வெடி பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. 

இலங்கையின் வட பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணி வெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2020 டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழுள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் மேற்படி வெடி பொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வு பெற்ற கேப்டன் பிரபாத் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணி வெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் ஆனையிறவு பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment