சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விஷேட துஆ பிராத்தனை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

சுனாமி அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விஷேட துஆ பிராத்தனை

(எம்.என்.எம்.அப்ராஸ்)

நாட்டில் கடந்த 2004 டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்ததினால் உயிரிழந்தவர்களின் 16வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கல்முனையில் (26-12-2020) நேற்று இடம்பெற்றது.

இதற்கமைய கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரிப் நிர்வாக சபை, இணைந்து ஏற்பாடு செய்த கத்தமுல் குர்ஆன் தமாம் ,விஷேட துஆ பிராத்தனை கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன், இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று முழுமையா நீங்க வேண்டியும் விசேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

கடந்த 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்தத்தினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி அதிகமான உயிரிழப்புக்களையும், சேதங்களை சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment