பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் Covishield தடுப்பூசி : ஒப்புக் கொண்ட AstraZeneca நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2024

பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் Covishield தடுப்பூசி : ஒப்புக் கொண்ட AstraZeneca நிறுவனம்

கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியானது பக்கவிளைவை ஏற்படுத்துவதாக அதன் நிறுவனமான இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா (AstraZeneca ) நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா (Corona) வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்த நிலையில் இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா (AstraZeneca) நிறுவனம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (University of Oxford) இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட நிலையில் இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வந்ததது.

அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இது தொடர்பான ஆவணத்தில் கொரோனா தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்துமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்குமெனவும் எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment