கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை இக்பால் கலைமன்றத்தின் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று 25.12.2020 வெள்ளிக்கிழமை நாவலடி பிரதேசத்தில் கலைஞர் KM. ஜிப்ரியின் இல்லத்தில் பி.ப. 4.30 மணிக்கு இடம் பெற்றது. குறுகிய ஏற்பாட்டில் இச்சந்திப்பு இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு அவ்வமைப்பின் தலைவர் ALM. லியாப்தீன் (JP) அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் கலைஞர்கள் எதிர்நோக்கும் சவால் மற்றும் எமது பிரதேசத்தில் மங்கிச் செல்லும் பிரதேச கலைகள் மற்றும் மூத்த கலைஞர்கள் தொடக்கம் வளர்ந்து வரும் கலைஞர்களின் பங்களிப்போடும் இவர்கள் அனைவரையும் இணைத்து எமது பணியினை மேலும் சிறப்பாக எதிர்காலத்தில் எடுத்து செல்வது சம்பந்தமாக ஆராயப்பட்டது.
தற்போது நிலவும் Covit 19 கொரோனா தொற்று சூழ்நிலையில் நீண்ட வரலாறு கொண்ட எமது பிரதேசத்தின் கலை மரபுகளை மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளை பேணி மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

No comments:
Post a Comment