மொகிதீன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

மொகிதீன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா COVID-19 தொற்று காரணமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை கிராமத்தில் செயற்பட்டு வரும் மொகிதீன் சனசமூக நிலையமானது பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இலவசமாக முகக் கவசம் வழங்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

அந்த வகையில் அப்பிரதேசத்தில் உள்ள மட்/மம/பிறைந்துறைச்சேனை அஸ்கர் மகா வித்தியாலயம் மற்றும் மட்/மம பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் உள்ள அனைத்து மாணவர்களுக்கு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இத்திட்டமானது பாடசாலை 3ஆம் தவணை விடுமுறை முடிவடைந்து 2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாணவர்கள் பாடசாலை கல்வியை தொடரவுள்ள நிலையில் அண்மைக்காலமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பாதிப்படைந்த நிலையில் எமது நாடும் இதில் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் பிறைந்துறைச்சேனை பிரதேசமும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஒன்றாக முகக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி நோய் கிருமிகளிருந்து பாதுகாக்கும் முகமாக முகக் கவசம் வழங்கும திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். 

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும் உள்ளம் கொண்டவர்கள் தயவுசெய்து உதவிகளை வழங்க முன்வருமாறு அன்பாய் கேட்கின்றோம். 

தொடர்புக்கு 
மொகிதீன் சனசமூக நிலையம் - பிறைந்துரைச்சேனை 
தலைவர் 0752808781
செயலாளர் 0767617871

ACC/NO:- 
DFCC VARDHANA BANK
ODDAMAVADI BRANCH - 057107000264

No comments:

Post a Comment