கடலில் மிதந்த யுவதியின் சடலம் : வெள்ளவத்தையில் சம்பவம்..! - News View

About Us

About Us

Breaking

Saturday, December 26, 2020

கடலில் மிதந்த யுவதியின் சடலம் : வெள்ளவத்தையில் சம்பவம்..!

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - வௌ்ளவத்தை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இன்று (26) மதியம் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளவத்தையை சேர்ந்த 26 வயதான யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியின் மரணத்திற்கான காரணம் தெரியாத போதும், அவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த பெண், வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகே வரை சிறிய ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ளதாகவும், அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடல் பகுதியை நோக்கி சென்றதாகவும் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ள நிலையில், அவற்றை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment