மக்களுக்கு மிகவும் நெருக்கமான பொலிஸ் சேவையை முன்னெடுக்க விசேட கலந்துரையாடல்..! - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

மக்களுக்கு மிகவும் நெருக்கமான பொலிஸ் சேவையை முன்னெடுக்க விசேட கலந்துரையாடல்..!

(செ. தேன்மொழி) 

மக்களுக்கு மிகவும் நெருக்கமான பொலிஸ் சேவையை எதிர்வரும் காலங்களில் முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்குக்கும், பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் தலைமையில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. 

நேற்று பிற்பகல் இரண்டு மணி தொடக்கம் பிற்பகல் நான்கு மணி வரையும் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் இதன்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், 11 சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், மேலும் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் 30 பேர் வரையிலும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது மக்களுக்கு விருப்பமான முறையில் பொலிஸாரின் செயற்பாடுகளை முன்னேற்றமடையச் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. 

அதற்கமைய குற்றச் செயற்பாடுகளை தடுத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயற்பாடுகளை தடுத்தல் தொடர்பிலும், பொலிஸாருக்கு தேவையான நலன்புரி சேவைகளை பெற்றுக் கொடுத்தல், வீதி பாதுகாப்பு மற்றும் வாகன விபத்துக்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment