கேகாலை வரக்காபொல பிரதேச செயலாளர் பிரிவில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஒருவர் தனபால பாணி மருந்தை அருந்தியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர் உடுகும்புர ஒத்தாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
வரக்காபொல பொது சுகாதார பரிசோதகர் ஹேமந்த குமார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த 12 கொரோனா தொற்றாளர்கள் துல்ஹிரி, தல்லியத்த, நிவட்டுவ, தும்மலதெனிய, வேர கல, ஒத்தாப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹேமந்த குமார மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment