போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள்

புழக்கத்தில் விடப்பட்டுள்ள போலி நாணயத்தாள்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று அநுராதபுரத்தில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்தது.

போலி நாணயத்தாள்களை அச்சிடுவது தொடர்பாக இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இதுவாகும். 

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. எனவே நீங்கள் பொருட்களை வாங்கும் போது அல்லது பணத்தை பரிமாறிக் கொள்கையில் போலி நாணயத்தாள்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 

மேலும் உண்மையான தாள்களிலுள்ள ஒத்த அம்சங்களை அடையாளம் காண முயற்சியுங்கள் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment