மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. அதன்பின் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதற்கிடையே இங்கிலாந்தில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.
இந்தநிலையில் மாறுபாடு ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை கூறும் போது, ‘ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பதுடன் சேர்ந்து சோர்வு, பசியின்மை, தலை வலி, வயிற்றுப்போக்கு, மன குழப்பம், தசை வலி, தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதிய வகை கொரோனா வைரஸ் முன்பைவிட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனில் வெகுவேகமாகப் பரவி வரும் புதிய வகைக் கொரோனா வைரஸ் தொற்று முதல்முறையாக ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி லண்டனிலிருந்து பிராங்பர்ட் சென்ற விமானப் பயணிக்கு விமான நிலையத்தில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
பெர்லினில் உள்ள ஆய்வு கூடத்தில் அவரது உடல் திரவ மாதிரி சோதிக்கப்பட்டதில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக அதிகாரிகள் கூறினர்.
பாதிக்கப்பட்ட நபர் ஜேர்மனி சென்றதிலிருந்து தமது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment