கொரோனா வைரசில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவர முயன்றவேளை தடுத்து நிறுத்தினர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

கொரோனா வைரசில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவர முயன்றவேளை தடுத்து நிறுத்தினர்

கொரோனா வைரசிஸ் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான சாதனங்கள் வசதிகள் genetic sequencing analyzers இலங்கையிடம் இல்லை என மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வைரஸ் உட்பட கொரோனா வைரசிஸ் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான சாதனங்கள் வசதிகள் இலங்கையிடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அந்த சாதனங்களை கொண்டுவருவதற்கு மூன்று தடவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இலங்கையில் கொரோனா முற்றாக ஒழிக்கப்ட்டுவிட்டது என வதந்திகளை பரப்பிய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினார்கள் என ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

முதலாவதும் இரண்டாவதும் கொரோனா அலைக்கு நடுவில் சில அதிகாரிகள் இலங்கையில் கொரோனா முற்றாக முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது இதன் காரணமாக கொவிட்டிற்காக மேலதிகமாக செலவிட வேண்டியதில்லை என கருதினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் நாங்கள் கொரோனா வைரசிஸ் ஏற்படக்கூடிய புதிய மாற்றங்களை அடையாளம் காண்பதற்கான சாதனங்கள் பிசிஆர் சாதனங்கள் போன்றவை இலங்கைக்கு அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பல்வேறுபட்ட நபர்கள் பல்வேறு தரப்பட்டவர்கள் இவைகள் தேவையற்ற செலவீனங்கள் கொரோனா முடிவிற்கு வந்தது என குறிப்பிட்டனர் என ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment