கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை இறக்குமதி செய்வதை துரிதப்படுத்துமாறு நிபுணர்கள் குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் மருந்துகளை இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து ஆராய்வதற்காக கொரோனா வைரஸ் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே நியமித்த குழுவினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள மருந்துகளே கொரோனா வைரசினை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தற்போதுள்ள ஒரேயொரு வழி என்பதால் மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்த மருந்தினை பெறுவதற்கு இலங்கை தயாராகவுள்ளது என இலங்கை அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிவிக்க வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் இராஜாங்க அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கைக்கு கூடிய விரைவில் கொரோனா வைரஸ் மருந்தினை கொண்டு வருவதன் மூலம் பொருளாதாரத்திற்கு கூடிய விரைவில் புத்துயுர் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் சுற்றுலாத்துறையும் முன்னேற்றமடையும் எனவும் மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment