மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமில்லை என்கிறார் ஓமல்பே சோபித தேரர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமில்லை என்கிறார் ஓமல்பே சோபித தேரர்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமில்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசிற்கான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கடன்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் தருணத்தில் மாகாண சபைத் தேர்தல்களிற்கு பணத்தை செலவிடுவது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கொரோனா வைரசின் பிடியில் சிக்குண்டுள்ளது என தெரிவித்துள்ள ஓமால்பே சோபித தேரர் அரசாங்கம் மீண்டும் வெளிநாட்டு கடன்களை பெற முயல்வது துரதிஸ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 க்கான மருந்தினை பெறுவதற்காக அரசாங்கம் 10 பில்லியன் ரூபாய் கடனை கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு மிகப்பெருமளவு பணம் தேவை என தெரிவித்துள்ள அவர் மாகாண சபைகளுக்காக 100 மில்லியன் தேவைப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தருணத்தில் தேர்தலை நடத்தும் நிலையில் நாடு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமில்லாத தருணம் என்பதை அரசாங்கம் உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment