சோளப் பயிர்ச் செய்கையை அழிக்கும் படைப் புளுக்கள் - உரிய அதிகாரிகள் கவனம் செலுத்லுமாறு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

சோளப் பயிர்ச் செய்கையை அழிக்கும் படைப் புளுக்கள் - உரிய அதிகாரிகள் கவனம் செலுத்லுமாறு வேண்டுகோள்

திருகோணமலை மாவட்டம் தம்பலகமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சோளப் பயிர்ச் செய்கையில் படைப்புளுக்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சோளத் தோட்ட செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்படை புளுவின் தாக்கம் காரணமாக சோள உற்பத்தியில் அழிவுகள் ஏற்படுவதுடன் விளைச்சளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தம்பலகமம், சிராஜ் நகர், முள்ளிப்பொத்தானை உட்பட பல பகுதிகளிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் பயிர் செய்கையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா, குச்சவெளி, வெறுகல் உட்பட பல பகுதிகளிலும் பல ஏக்கர் நிலங்களில் சோளம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் படை புளு தாக்கம் செலுத்தி அழிவுகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி இது தொடர்பில் சாதகமான முடிவுகளை தருமாறு சோள செய்கையாளர்கள் கேட்டு கொள்கின்றனர்.

No comments:

Post a Comment