மனித உரிமை மீறப்படும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதில்லை - அன்று விமான நிலையத்தை மூடியிருந்தால் இந்தளவு பாதிப்பு வந்திருக்காது : மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Sunday, December 6, 2020

மனித உரிமை மீறப்படும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதில்லை - அன்று விமான நிலையத்தை மூடியிருந்தால் இந்தளவு பாதிப்பு வந்திருக்காது : மனுஷ நாணயக்கார

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கத்திடம் எந்த நிவாரணமும் இல்லை. மஹர சிறைச்சாலை கலவரமும் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பாகும் என மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சுற்றுலாத் துறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல மனித உரிமை முக்கியமாகும். அதனை எமது அரசாங்கம் செய்திருந்தது. அதனால்தான் எமது சுற்றுலாத் துறை சர்வதேச மட்டத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தது. ஈஸ்டர் தாக்குதலால் சுற்றுலாத் துறை பாரியளவில் பாதிக்கப்பட்டது. என்றாலும் குறுகிய காலத்தில் சுற்றுலாத் துறையை பழைய நிலைக்கு கொண்டுவர முடியுமாகியது.

மேலும் கொரோனா காரணமாக தற்போது சுற்றுலாத் துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்ட சிறிய வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சுற்றுலா பயணிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்றவர்கள் வாகனங்களின் லீசிங் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் தங்களது வாகனங்களில் தற்போது தேங்காய் விற்பனை செய்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் வழங்கவில்லை. அனைவருக்கும் வழங்கும் 5ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கொரோனாவால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டிருப்பது உண்மையாக இருந்தாலும் அதனை ஆரம்பத்திலே தடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. 

கொரோனா அச்சுறுத்தல் வந்த ஆரம்பத்திலே ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் விமான நிலையத்தை மூடுமாறு எதிர்க்கட்சி தலைவர் இந்த சபையில் தெரிவித்தார். ஆனால் அரசாங்கம் அதனை விமர்சித்து வந்தது. அன்று விமான நிலையத்தை மூடியிருந்தால் இந்தளவு பாதிப்பு நாட்டுக்கு வந்திருக்காது. 

அதேபோன்று தற்போது மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் காரணமாகவும் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பு ஏற்படும். மனித உரிமை மீறப்படும் நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருவதில்லை என்றார்.

No comments:

Post a Comment