கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவர் பெற்ற தனது சிசுவை புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று (13) சில மணி நேரங்களுக்கு முன்னர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றார்.
அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவருடைய உடலில் குழந்தை பிறந்தமைக்கான ஆதாரங்கள் காணப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருக்கின்றனர்.
இதையடுத்து அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு குழந்தை பிறந்ததாகத் தெரிவித்த குறித்த பெண் குழந்தையை புதைத்து விட்டதாகத் தெரிவித்திருக்கின்றார்.
இருந்த போதிலும் புதைக்கப்பட்ட இடம் பிரமனந்தனாறு என்றும், உழவனூர் என்றும் மாறி மாறி தகவல்களை வழங்கி வருவதால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தினை கண்டுபிடிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment