ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவராக இம்தியாஸ், தவிசாளராக கபீர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 29, 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவராக இம்தியாஸ், தவிசாளராக கபீர்

ஐக்கிய மக்கள் சக்தியில் 6 சிரேஷ்ட உப தலைவர்களையும், 5 உப தலைவர்களையும் நியமிப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் புதிய யாப்பின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, சரத் பொன்சேகா, குமார வெல்கம, தலதா அத்துகோரல மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சிரேஷ்ட உப தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், ரவி சமரவீர, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க, சந்ராணி பண்டார, ரஞ்சன் அளுவிகார ஆகியோருக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாசீமும், உப செயலாளராக அசோக அபேசிங்கவும் செயற்படவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்புக்கு அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு பண்டாரவளையில் நடைபெற்ற கூட்டத்தின் போது ஒப்புதல் வழங்கியது.

குறித்த யாப்பின் பிரகாரம் புதிய உறுப்பினர்கள் தேர்வு ஜனவரியில் நடைபெறவுள்ளது.

தலைவர் உட்பட நிர்வாகப் பதவிகளுக்கு வருடாந்தம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

செயற்குழுவுக்கு 80 பேரை உள்வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைந்த பின்னர் தலைமைத்துவ சபையொன்று உருவாக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment