உக்ரேனிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர், ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சுகாதார வழிகாட்டகளின் அடிப்படையில், சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் குறித்த முன்னோட்டத் திட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் நிர்வகிக்கப்படுவதாக, ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை கொண்டுவருவதற்கான முன்னோட்ட திட்டத்தின் (Pilot Project) அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை (28) முதற்கட்டமாக உக்ரைனிலிருந்து 185 பேர் அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்றையதினமும் (29) உக்ரைனிலிருந்து 160 சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்ததாக, கொவிட்-19 பரைவலைத் தடுக்கம் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment