வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை - பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை - பாராளுமன்ற உறுப்பினர் திலீபன்

வவுனியாவில் அழிக்கப்பட்ட காடுகளை மீள் உருவாக்க 10 வருடங்கள் தேவை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்.

நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் பத்து இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியல் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மரநடுகை நிகழ்வுகள் போலியான வகையில் இடம்பெறக்கூடாது. இந்த திட்டம் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். மக்களிற்காகவே மரங்கள், எனவே கிராமங்கள், ஆலயங்கள், மைதானங்களிற்கு அண்மையில் மரங்களை நட முடியும். 

வவுனியாவை பொறுத்தவரை பத்து வருடங்களிற்கு இப்படியான திட்டத்தினை நடைமுறைப்படுத்தினாலேயே காணாமல்போன மரங்களிற்கு ஈடுசெய்ய முடியும்.

தற்போது அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளரின் துரித நடவடிக்கைகளால் ஓரளவு அது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடரவேண்டும்.

வில்பத்து என்ற இடத்திலும் காடழிப்பு இடம்பெற்றிருந்தது. கேட்டால் குடியேற்றம் என்கிறார்கள். உரிய அதிகாரிகளிடம் கேட்டால் குடியேற்றத்திற்கு உகந்த இடத்தினை ஒதுக்கி கொடுத்திருப்பார்கள்.

காடுகளை அழித்து அதனை செய்யவேண்டிய தேவையில்லை. அத்துடன் நிலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்குடன் வரும் காலங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியினை நிறுத்துவதற்கு முயற்சி எடுக்கவேண்டும் என்றார்.

வவுனியா விசேட, ஓமந்தை விஷேட நிருபர்கள்

No comments:

Post a Comment