திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது - மாவட்ட அரசாங்க அதிபர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது - மாவட்ட அரசாங்க அதிபர்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளான முருகாபுரி, ஜின்னாநகர் மற்றும் அபயபுரவின் ஒரு பிரிவு என்பன மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பல பிரதேசங்களில் இனங்காணப்பட்டதனை தொடந்து மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்கள் குறித்த பிரதேசங்களைவிட்டு வெளியேறல் மற்றும் குறித்த பிரதேங்களுக்கு வெளியார் உள்நுழைதல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்தியவசிய மருத்துவ தேவைகள் மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்தியவசிய பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கில் உரிய நடைமுறைகள் குறித்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டும் வருகின்றன.

மாவட்ட மக்கள் இத்தருனத்தில் சுகாதார நடைமுறைகளை முற்றாக கடைப்பிடித்து கொவிட் பரவலை ஒழிக்க பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் அமுலில் உள்ள பிரதேசங்களில் பொலிசார், பாதுகாப்பு படையினர் மற்றும் சுகாதாரத்துறையினரும் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment