வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் கல்விக் கோட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
அத்துடன் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்ட பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட உடுவில் கல்விக் கோட்டத்தில் 33 பாடசாலைகளும் தெல்லிப்பழை கல்விக் கோட்டத்தில் 40 பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
மருதனார் மடம் பொதுச் சந்தை கொத்தணியின் பின்னர் இந்த இரண்டு கல்விக் கோட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment