சித்திரவதைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

சித்திரவதைகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

(இராஜதுரை ஹஷான்) 

1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குதல் அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான செயல்களை மேற்கொள்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும், அதற்கு முடிந்தவரை தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். 

அதனால், அது தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு ஏற்புடைய வகையில் திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தை தயாரிக்க சட்ட வல்லுநர்வலுக்கு ஆலோசனை வழங்கவும் நீதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment